முகப்பு
தமிழ்நாடு

சோழர்களைப் புகழ்ந்த பிரதமர் மோடி! ஹிந்தியைத் தவிர்த்து ஆங்கிலத்தில் உரை!!

திருச்சி அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை....

Updated On : 11 மார்ச், 2026 at 6:33 PM
பிரதமர் மோடி உரை
பகிர்:

கங்கைகொண்ட சோழபுரம் வந்தது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தஞ்சை பெரிய கோயிலைப் பற்றியும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

திருச்சிக்கு வந்துள்ள பிரதமர் மோடி, அரசு நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார். 2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் சேவையை காணொலி வாயிலாகத் தொடக்கி வைத்தார்.

நீலகிரி, ஈரோட்டில் ரூ. 3,680 கோடி முதலீட்டில் பாரத் பெட்ரோலியம் எரிவாயு விநியோக குழாய் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.

Advertisement

இதுபற்றி பேசிய பிரதமர் மோடி,

"இந்த திட்டத்தின் மூலமாக ஈரோடு, நீலகிரியில் 9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலமாக கேஸ் வழங்குவதை உறுதி செய்யும் . இதன் மூலமாக வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பெட்ரோலிய திட்டங்களால் காற்று மாசு குறைந்து சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும். 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இந்த எரிவாயு திட்டம் இருக்கும். கிராமப்புற பொருளாதாரம் மேம்படும் வகையில் 370 கிமீ சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆடி திருவாதிரை அன்று கங்கைகொண்ட சோழபுரம் வந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மாமன்னன் ராஜேந்திர சோழன் எழுப்பிய இந்த கட்டுமானத்தின் 1,000-மாவது ஆண்டு தொடக்கத்தை நாம் கொண்டாடினோம். இது யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இடம். உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இங்கு நாம் அங்கே ஒரு முக்கிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறோம். இது கோயிலுக்கு அருகே வருவதால் மக்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. கடந்த வாரம் மதுரை வந்தபோது பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்தேன்.

மாநில அரசின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல், உள்ளூர் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்" என்று கூறினார்.

கடந்த வாரம் மதுரை மாநாட்டில் ஆங்கிலத்தில் பேசிய பிரதமர் மோடி, இன்றைய திருச்சி மாநாட்டிலும் ஹிந்தியைத் தவிர்த்து ஆங்கிலத்தில் பேசினார்.

summary

PM Modi speech in trichy govt function

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.