டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் குறைந்து ரூ. 92.01 ஆக நிறைவு!
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் குறைந்து ரூ. 92.01 ஆக உள்ளது.
மும்பை: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வு மற்றும் மேற்கு ஆசியாவில் போர் தீவிரமடைந்ததால் டாலரின் மதிப்பு வலுவானதை தொடர்ந்து, இன்றயை அந்நிய செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் குறைந்து ரூ. 92.01 ஆக உள்ளது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.91.92 ஆக தொடங்கி, பிறகு ரூ.91.85 முதல் ரூ.92.06 என்ற வரம்பில் வர்த்தகமானது. வர்த்தக முடிவில், அதன் முந்தைய நாள் முடிவை விட 16 காசுகள் குறைந்து ரூ. 92.01 ஆக நிலைபெற்றது.
நேற்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 36 காசுகள் உயர்ந்து ரூ.91.85 ஆக முடிவடைந்தது.
Advertisement
Advertisement
Rupee declined 16 paise to settle at 92.01 against the US dollar on Wednesday, weighed down by a sharp rise in global crude oil prices.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.