டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.95 ஆக நிறைவு!
அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.95 ஆக நிலைபெற்றது.
மும்பை: வெளிநாடுகளில் அமெரிக்க டாலரின் வலுவான மதிப்பை தொடர்ந்து, வெளிநாட்டு நிதி வெளியேற்றம் உள்ளிட்டவையால், ரூபாய் மதிப்பு தொடர்ந்து ஏழாவது நாளாக பலவீனமாக இருந்தது. இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.95 ஆக நிலைபெற்றது.
அமெரிக்க-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தே காணப்பட்டாலும், உள்நாட்டுப் பங்குச் சந்தைகள் சாதகமாக இருந்ததால் ரூபாயின் சரிவு கட்டுப்படுத்தப்பட்டதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 95.89 ஆக தொடங்கி, டாலருக்கு நிகராக ரூ. 95.85 முதல் ரூ. 95.98 என்ற நிலைக்கு சென்று, இறுதியில் டாலருக்கு நிகராக 7 காசுகள் சரிந்து ரூ. 95.95 ஆக நிலைபெற்றது.
Advertisement
Advertisement
The rupee stayed weak for the seventh consecutive session declining 7 paise to 95.95.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.