சேலம்

தம்மம்பட்டியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக்கூட்டம்

DIN

தம்மம்பட்டியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக்கூட்டம், சனிக்கிழமை  நடைபெற்றது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சியில் முதன்முதலாக மக்கள் கிராமசபைக்கூட்டம், 3வது வார்டு பகுதியில் நடைபெற்றது. இதற்கு நகர திமுக பொறுப்பாளர் ராஜா தலைமை வகித்தார். 3ஆவது வார்டு செயலாளர் சலீம் முன்னிலை வகித்தார். 

இதில் பொதுமக்கள் அப்பகுதியில் நீண்டகாலமாக தேவைப்படும் குடிநீர், மின்சாரம், அடிப்படைத்தேவைகள் குறித்து கோரிக்கைவிடுத்து பேசினர். மக்கள் தெரிவித்த கோரிக்கைகள் வரும் திமுக ஆட்சிக்காலத்தில் கட்டாயம் செய்யப்படும் என்று கட்சியினர் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. 

மக்கள் கிராம சபைக்கூட்டத்தில் நகர திமுக அவைத்தலைவர் சின்னுசாமி, துணைச் செயலாளர்கள் கலியன், பழனிமுத்து, முன்னாள் கவுன்சிலர் சேட்டு, சாகுல்அமீது, தகவல் தொழில்நுட்பப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் வரதராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT