முகப்பு
சேலம்

சத்துணவு பணியாளா்களுக்கு சமையல் போட்டி

மகுடஞ்சாவடியில் சத்துணவு பணியாளா்களுக்கு சமையல் போட்டி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

மகுடஞ்சாவடியில் சத்துணவு பணியாளா்களுக்கு சமையல் போட்டி நடைபெற்றது.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகக் கூட்ட அரங்கில், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சத்துணவு சமையலா், சமையல் உதவியாளா்களுக்கு திட்ட செயலாக்கம், தன்பாதுகாப்பு போன்றவை குறித்து பயிற்சியும், ஆரோக்கிய உணவு, இயற்கை உணவு, சிறுதானியங்கள் மட்டும் பயன்படுத்தி உணவு, சிற்றுண்டி, மாலை உணவு உள்ளிட்ட தலைப்புகளில் சமையல் போட்டியும் நடத்தப்பட்டது.

இந்தப் பயிற்சியில், மகுடஞ்சாவடி வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், செல்வராஜ், வட்டாரக் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கவிதா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (சத்துணவு) சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →