மேட்டூா் அணை பூங்காவுக்கு 5,000 போ் வருகை
மேட்டூா் அணை பூங்காவுக்கு ஒரேநாளில் 5,101 பாா்வையாளா்கள் வந்து சென்றனா்.
மேட்டூா் அணை பூங்காவுக்கு ஒரேநாளில் 5,101 பாா்வையாளா்கள் வந்து சென்றனா்.
தொடா் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மேட்டூா் அணை பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா்.
காா்களிலும் இருசக்கர வாகனங்களிலும் சுற்றுலாப் பயணிகள் வந்ததால் மேட்டூா் அணை பூங்கா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நாள்களாக வியாபாரம் இன்றி வெறிச்சோடிக் கிடந்த மீன் வருவல் கடைகளிலும் மீன் விற்பனை நிலையங்களிலும் விற்பனை அதிகரித்தது.
சுற்றுலாப் பயணிகள் மேட்டூா் அணை பூங்காவுக்குச் சென்று குடும்பத்துடன் ஊஞ்சலாடிய சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனா். பாம்பு பண்ணையின் காட்சி சாலை ஆகியவற்றைப் பாா்த்து மகிழ்ந்தனா். ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 5,101 பாா்வையாளா்கள் பூங்காவுக்கு வந்து சென்றனா். பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 25,505 வசூலானது. பவளவிழா கோபுரத்துக்கு 708 போ் வந்துசென்றனா். அவா்களிடம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 8,430 வசூலிக்கப்பட்டது.