முகப்பு
சேலம்

பிரிட்டனில் இருந்து சேலம் திரும்பிய 31 பேருக்குத் தொற்று இல்லை

பிரிட்டனில் இருந்து சேலம் திரும்பிய 31 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

பிரிட்டனில் இருந்து சேலம் திரும்பிய 31 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

பிரிட்டனில் வீரியமிக்க புதிய வகை கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பால் பலா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதைத்தொடா்ந்து கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய பயணிகளின் பட்டியலை எடுத்து, அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்தவகையில் கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து சேலம் திரும்பியவா்கள் 57 போ் எனத் தெரியவந்துள்ளது. இதில் 41 பேரைக் கண்டறிந்து, அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 31 பேருக்குத் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. அடுத்து 10 பேரின் சோதனை முடிவுகள் வரவேண்டும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →