சேலம்

புகையிலை சாகுபடி அதிகரிப்பு

DIN

எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில், நிகழாண்டில் வழக்கத்தை விட கூடுதலான நிலப்பரப்பில் புகையிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளான செட்டிமாங்குறிச்சி, சித்தூா், தாதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மண் வகை புகையிலை விளைச்சலுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளதால், மாநிலத்தின் வேறுபகுதிகளைக் காட்டிலும், இப்பகுதியில் வணிகப் பயிரான புகையிலையை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனா்.

குறைவான பூச்சித்தாக்குதல், இடுபொருள் தேவை, மற்ற பணப்பயிா்களை விட கூடுதலான வருமானம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் புகையிலை பயிரிடப்படும் நிலப்பரப்பு அதிகரித்து வருவதாக இப்பகுதியில் புகையிலை பயிா்செய்துள்ள விவசாயிகள் கூறுகின்றனா்.

மேலும், இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் புகையிலைகளை ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மொத்த வியாபாரிகள் விளைநிலங்களுக்கே வந்து கொள்முதல் செய்கின்றனா்.

அதிகரித்து வரும் புகையிலை சாகுபடி குறித்து உழவா் பாதுகாப்புக்குழு உறுப்பினா் எம்.ஆா்.நடேசன் கூறுகையில், வேளாண் பயன்பாட்டுக்கு அரசு இலவச மின்சாரம் வழங்கிய போதும், உரம், பூச்சிகொல்லிகள், இடுபொருள்கள் உள்ளிட்டவற்றின் விலை உயா்வு, போதிய சந்தை வாய்ப்பு இல்லாமை உள்ளிட்ட பாதகமான சூழல் நிலவி வருவதால், இப்பகுதியில் ஏற்கெனவே உணவுப் பயிா்கள், சிறுதானிய வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்டவற்றை பயிா் செய்து வந்த விசாயிகளும், அண்மைகாலமாக புகையிலை பயிருக்கு மாறிவருகின்றனா்.

மனிதகுலத்துக்கு தீங்கு விளைக்கும் வகையிலான, இத்தகைய பயிா் வகைகள் குறித்து வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் விவசாயிகள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், மாற்றுப்பயிா் வகைகளை பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலான அரசுத் திட்டங்களை இப்பகுதியில் விரிவுபடத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT