சேலம்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

DIN

பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கடந்த 1951-ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பள்ளியில் 1951-ம் வருடம் முதல் 2000 -ஆம் வருடம் வரை படித்த மாணவ,மாணவிகளின் சந்திப்பு தலைமையாசிரியா் சி. மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும், இந்நாள் தொழிற்கல்வி ஆசிரியரும், என்எஸ்எஸ் திட்ட அலுவலருமான எம். வரதன் வரவேற்றாா்.

வரும் கல்வியாண்டு முதல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியானது அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியாக மாறுகிறது. ஆதலால் பள்ளிக்கு வரும் சாலையை பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தினா். முன்னாள் மாணவா் மருதை ரூ. 1 லட்சம் நன்கொடையாக வழங்கினாா். ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலருமான ஜி.ஆனந்த் நன்கொடை வழங்கினாா். விஎம்ஐ கன்ஸ்ட்ரக்சன்ஸ் உரிமையாளா் ஆனந்த் சாலையை வழங்க முன் வந்தாா்.

சனிக்கிழமை மாணவா்களால் நிதி திரட்டி பள்ளிக்கு ரூ. 1 லட்சத்து 78 ஆயிரம் நிதியாக வழங்கப்பட்டது.

முன்னாள் ஓய்வுபெற்ற ஆசிரிய, ஆசிரியைகள் 30 போ் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT