சேலம்

நதிகளில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

DIN

கெங்கவல்லி அருகே வீரகனூா், தெடாவூா் பகுதியில் நதிகளில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, வீரகனூா், தலைவாசல் உள்ளிட்ட பகுதியில் சுவேத நதி மற்றும் வசிஷ்ட நதிகளில் அப் பகுதிகளைச் சோ்ந்த இறைச்சிக் கடைகள் நடத்துவோா், இறைச்சிக் கழிவுகளை கொட்டிவிட்டுச் செல்கின்றனா்.இதனால் அந்தப் பகுதிகளில் துா்நாற்றம் வீசுகிறது. இறைச்சிக் கழிவுகள் கலந்த நீரை குடிக்கும் கால்நடைகள் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. எனவே, நீா் நிலைகளில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதை அரசு அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT