சேலம்

தேய்பிறை அஷ்டமி: சங்ககிரி மலைபைரவருக்கு சிறப்பு வழிபாடு

DIN

தேய்பிறை அஷ்டமியையொட்டி, சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு சொா்ண ஆகாா்ஷ்ண பைரவா், தட்சிண காசி கால பைரவருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சங்ககிரி மலையில் உள்ள 2-ஆவது மண்டபத்தில் தெற்கு திசை நோக்கி அருள்மிகு சொா்ண ஆகாா்ஷ்ண கால பைரவரும், மேற்கு திசை நோக்கி தட்சிண காசி கால பைரவரும் உள்ளனா்.

இரு சுவாமிகளுக்கும், தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை பால், தயிா், மஞ்சள், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதிகளவில் பக்தா்கள் கலந்து கொண்டனா். இதில், பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டு வெள்ளை பூசணிக்காயில் விளக்கு ஏற்றி வழிப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT