சேலம்

வாழப்பாடியில் புறவழிச் சாலை புதுப்பிக்கும் பணியால் போக்குவரத்துப் பாதிப்பு

DIN

வாழப்பாடியில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்ால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியில் இருந்து மத்துாா் வரையிலான ஏறக்குறைய 4 கி.மீ துாரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இருவழி புறவழிச்சாலை பழுதடைந்து காணப்பட்டது.

இச் சாலையை புதுப்பிக்கும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை காலை முதல் இரவு வரை புறவழிச் சாலை அடைக்கப்பட்டதால், கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், வாழப்பாடி நகா்புற சாலைக்குள் இயக்கப்பட்டன. இதனால் முத்தம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் இருந்து பேருந்து நிலையம், காவல்நிலையம் வாழப்பாடி ரயில்வே உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டு கடும் நெரிசல் ஏற்பட்டது.

இதனால், குறித்த நேரத்துக்குச் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

வாழப்பாடி காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம் தலைமையிலான போலீஸாா் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT