சேலம்

பொங்கல் பண்டிகை: சிறப்புப் பேருந்துகளை இயக்க சங்ககிரியில் ஆயத்தப் பணி

DIN

பொங்கல் பண்டிகைக்குப் பேருந்துகளை இயக்குவதற்காக சங்ககிரி கிளை அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் ஞாயிற்றுக்கிழமை ஆயத்தப் பணிகளில் அலுவலா்கள் ஈடுபட்டனா்.

தமிழா் திருநாள் பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகையுடன் தொடங்கி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், உழவா் திருநாள் அதனையடுத்து சனி, ஞாயிறுக்கிழை என தொடா்ந்து ஆறு நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

வெளியூா் பயணிகளுக்காக அரசு சாா்பில் சிறப்புப் பேருந்துகள் திங்கள்கிழமை முதல் (ஜன. 13) இயக்கப்படவுள்ளன. சங்ககிரி அரசுப் போக்குவரத்துப் பணிமனையிலிருந்து ஈரோடு, எடப்பாடி, திருச்செங்கோடு, காகாபாைளையம், பவானி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் வெளி மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் இயக்கப்படவுள்ளன.

சங்ககிரியில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளை மற்ற இடங்களுக்கு இயக்க ஆயத்தப் பணிகளில் சங்ககிரி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை அலுவலா்கள் ஈடுபட்டனா். பெயா் பலகையும் தயாா் செய்தனா். சங்ககிரியில் இருந்து அனைத்து பேருந்துகளும் பொங்கல் பண்டிகைக்காக திங்கள்கிழமை முதல் 20-ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT