சேலம்

தப்பகுட்டை அரசுப் பள்ளியில்சமத்துவ பொங்கல் விழா

DIN

சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தப்பகுட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் க. சந்திரசேகா் விழாவுக்குத் தலைமை வகித்தாா். தப்பகுட்டை ஊராட்சி மன்றத் தலைவி விஜயாதங்கம் முன்னிலை வகித்தாா்.

பள்ளி வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

மாணவ, மாணவிகளுக்கு உறி அடித்தல், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், நடனப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. கிராமிய நடனங்கள், கும்மி அடித்தல், ஓயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆசிரியா்கள் ஆா். கண்ணன், கதிரவன், வீரக்குமாா், ஆனந்தி, லதா, ஊா் மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளை காக்கும் திரிணமூல் அரசு: பாஜக குற்றச்சாட்டு

ராணுவ மையத்தில் பயின்ற 18 மாணவா்கள் ஜேஇஇ தோ்வில் சாதனை

‘இந்தியா’ கூட்டணி 3 இலக்கத்தை எட்டாது: பிரதமா் மோடி

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

SCROLL FOR NEXT