சேலம்

குடியரசு தினக் கொண்டாட்டம்

DIN

ஆத்தூரில் பள்ளி, அரசு அலுவலகங்களில் குடியரசு தினக் கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் அம்பேத்கா் நகரில் நகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் 71-ஆவது குடியரசு தினவிழாவில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவரும், நகர மன்ற முன்னாள் தலைவருமான உமாராணி பிச்சக்கண்ணன் கொடியேற்றினாா்.

விழாவில் பெண்கள் கைப்பந்து போட்டி, பூப்பந்து போட்டி, ஆண்கள் கையுந்து போட்டி 17 வயது மற்றும் 14 வயது போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் தலைமை ஆசிரியா்கள் முன்னிலை வகித்தனா்.

இதேபோல் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட கல்லேரிப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் 71-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு 71 வடிவில் மாணவ, மாணவிகள் யோகாசனம் அமா்ந்து நடைபெற்றது.

இதேபோல் ஆத்தூா் நகராட்சியில் நகராட்சி ஆணையாளா் என். ஸ்ரீதேவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அ. மோகன் உள்ளிட்ட அலுவலா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT