தீயணைப்பு வீரர்களுக்கு ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கல்
சேலம் மாவட்டம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் சங்ககிரி தீயணைப்பு அலுவலர், வீரர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தன்மையுடைய மாத்திரைகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி
சேலம் மாவட்டம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் சங்ககிரி தீயணைப்பு அலுவலர், வீரர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தன்மையுடைய மாத்திரைகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றன.
சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் தலைவர் எ.ஆனந்தகுமார் தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலர் டி.அருள்மணி, தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி தன்மையுடையை மாத்திரைகளை இலவசமாக வழங்கினார்.
டிரஸ்ட் செயலர் ஆர்.ராகவன், நிர்வாகிகள் எஸ்.கணேஷ், ஆர்.கார்த்திகேயன், பொறியாளர் வேல்முருகன், கிஷோர்பாபு உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.