முகப்பு
சேலம்

மதுரை மாவட்டத்தில் கரோனாவுக்கு முதல் காவலர் பலி

மதுரை மாவட்டத்தில் கரோனாவுக்கு முதல் காவலர் பலியானார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:

மதுரை மாவட்டத்தில் கரோனாவுக்கு முதல் காவலர் பலியானார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி(51). இவர் 1989 ஆண்டு காவல் பிரிவில் பயிற்சி முடித்து, காவலராக பணியைத் தொடங்கியவர். தற்போது மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு - ஆய்வாளராக பணியாற்றி வந்தார். 

இந்நிலையில், பாண்டிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு ஜூன் 28 ஆம் தேதி அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் கடந்த 22 நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்தார். 

இந்நிலையில், இன்று அதிகாலையில் அவருக்கு தீவிர மூச்சு திறணல் ஏற்பட்டு, பாண்டி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மதுரை மாவட்ட காவல்துறையில கரோனாவிற்கு இறந்த முதல் நபர் சிறப்பு காவல் சார்பு- ஆய்வாளர் பாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →