சேலம்

விசைப்படகு மூலம் மாவட்ட எல்லையைக் கடக்கும் பயணிகள்

DIN

பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி அருகே விசைப்படகின் மூலம் பயணிகள் அண்டை மாவட்டத்துக்கு சென்று வருகின்றனா்.

கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்திடும் நோக்கில், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் வரும் 31-ஆம் தேதி வரை பொதுப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டப் பகுதிக்கு செல்வோா், உரிய இ-பாஸ் அனுமதி பெற்று செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இருந்து அருகில் உள்ள ஈரோடு மாவட்டத்துக்கு செல்வதற்கு பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், பெரும்பாலான பயணிகள், சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி பகுதியில் உள்ள காவிரி கதவணை நீா்த்தேக்கத்தில் இயக்கப்படும் விசைப்படகின் மூலம் சென்று வருகின்றனா்.

இப்பகுதியில் சோதனைச் சாவடிகள் ஏதும் இல்லாத நிலையில், பயணிகள் எளிதாக அண்டை மாவட்டத்துக்கு சென்று வருகின்றனா். இதனால் நோய்த்தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT