முகப்பு
சேலம்

சங்ககிரி: தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை

சேலம் மாவட்டம், சங்ககிரி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 32 பேருந்துகள் பொதுமக்களின் வசதிக்காக திங்கள்கிழமை இயக்கப்பட்டன. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 32 பேருந்துகள் பொதுமக்களின் வசதிக்காக திங்கள்கிழமை இயக்கப்பட்டன. 

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் மே 31ம் தேதி வரை பொது முடக்கம் அறிவித்திருந்தன. அதனையடுத்து  தற்போது  ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி நீட்டிப்பு செய்திருக்கின்றன. பொதுமுடக்க நீட்டிப்பு காலங்களில் அரசு பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக பல்வேறு தளர்வுகளை நீக்கியுள்ளன. இதனையடுத்து மே 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வர் பொதுபோக்குவரத்தில் பேருந்துகள் குறைந்தபட்ச பயணிகளுடன் எட்டு மண்டலமாக பிரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்குள் இயக்கப்படும் அறிவித்திருந்தார். 

முதல் மண்டலத்தில் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி  உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கி பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்திருந்ததில் சேலம் மாவட்டம் சங்ககிரி அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள  51 பேருந்துகளில் காலை 6 மணிக்கு சங்ககிரியிலிருந்து திருச்செங்கோடு, எடப்பாடி, ஈரோடு, பவானி,  காகாபாளையம் ஆகிய பகுதிகளுக்கு நகரப்பேருந்துகள் 18ம், திருச்செங்கோடு, எடப்பாடி,ஈரோடு, பவானி, சேலம் ஆகிய பகுதிகளுக்கு நகரப்பேருந்துகள் இல்லா பேருந்துகள் 14ம் மொத்தம் 32 பேருந்துகள் இயக்கப்பட்டன. இப்பேருந்துகளில் நகரப்பேருந்துகளில் 22 பயணிகளும், நகரப்பேருந்துகள்ள இல்லா பேருந்துகளில் 25 பயணிகளும் அமர்ந்து பயணம் செய்ய அதிகாரிகள் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.   

பணிமனையில் இருந்து பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கையுறை, முககவசம், கிருமினி நாசினிகள் வழங்கப்பட்டுள்ளன.   பணிமனையில் இருந்து புறப்பட்ட பேருந்துகள் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தம், புதிய பேருந்து நிலைய வளாகங்களில் பயணிகள் வருகைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அரசு, தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் மட்டும் மிக குறைந்த அளவில் பயணம் செய்தனர். சில பேருந்துகள் பயணிகள் இல்லாமல் மற்ற பகுதிகளுக்கு  ஓட்டிச் சென்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால் சங்ககிரி வழியாக திங்கள்கிழமை காலை  தனியார் பேருந்துகள் செல்லவில்லை.    

இது குறித்து தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் கூறுகையில் அரசு பேருந்துகளில் மிக குறைவான பயணிகளே பயணம் செய்கின்றனர். அவ்வாறு இயக்கும் போது பேருந்து கட்டணங்களை உயர்த்தாவிட்டால் டீசல் செலவிற்கே பற்றாக்குறை ஏற்படும், ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஊதியம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டும் என்றார். தமிழகரசு முதல் மண்டலத்தில் சேர்க்கப்பட்டுள்ள 7 மாவட்டங்களில் தருமபுரியை சேர்க்கப்படாததால் சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி மாவட்டத்திற்கு செல்லும் அரசு, தனியார் நிறுவனங்களின் பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

எனவே அரசு சேலம் மாவட்டத்திற்கு அருகே உள்ள தருமபுரி மாவட்டத்தினை முதல் மண்டலத்தில் இணைக்க வேண்டுமென்று அரசுக்கு பொதுமக்கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →