முகப்பு
இந்தியா

விண்வெளியில் பழுதான நேவிக் செயற்கைக் கோளின் அணு கடிகாரம்! அதனால் என்னவாகும்?

விண்வெளியில் பழுதான நேவிக் செயற்கைக் கோளின் அணு கடிகாரம் பற்றி..

Updated On : 18 மார்ச், 2026 at 11:20 AM
இஸ்ரோ
பகிர்:

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையத்தால் கடந்த 2013ஆம் ஆண்டு விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்ட இந்திய மண்டல வழிகாட்டி செயற்கைகோள் (நேவிக்) அமைப்பின் அணு கடிகாரம் செயலிழந்துப் போனதால், செயற்கைக் கோள்களின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது.

ஐஆர்என்எஸ்எஸ்-1எஃப் செயற்கைக் கோளின் அணு கடிகாரம் செயலிழந்துவிட்டதை, இஸ்ரோ கடந்த 13ஆம் தேதி அறிவித்திருந்தது.

செயற்கைக் கோளுடன் இணைக்கப்பட்டிருந்த அந்த அணு கடிகாரம், 10 ஆண்டுகளுக்கும் மேலான தன்னடைய இடைவிடாத செயல்பாட்டை நிறுத்தியிருக்கிறது. ஆனால், இது விஞ்ஞானிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய மண்டல வழிகாட்டி செயற்கைகோள் அமைப்பில் அடங்கிய நான்கு செயற்கைக் கோள்களில் ஒன்று முடங்கியதால், ராணுவ எல்லைகள், கடல் கண்காணிப்பு போன்ற பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், இதுபோன்ற தரவுகளைப் பெற இந்தியா மீண்டும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் கலிலியோ செயற்கைக் கோள் தரவுகளை நாடும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் இந்த வாய்ப்பை இந்தியா பெற வேண்டும் என்றால், இஸ்ரோ இரண்டு புதிய செயற்கைக் கோள்களை ஏவும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐஆர்என்எஸ்எஸ் 1எஃப் செயற்கைக் கோள் ஏவப்பட்டதற்கு முழு முக்கிய காரணமே கார்கில் போர்தான்.

1999-ஆம் ஆண்டில், கார்கில் போரின்போது, இடத் தரவு உள்ளிட்ட விவரங்களை வழங்க அமெரிக்கா மறுத்து விட்டது. இந்த பின்னடைவு போரின்போது பாதுகாப்புப் படைக்கு மிகப்பெரிய சாவலாக இருந்தது. இதனால், இந்தியா தன்னுடைய தற்சார்பை உறுதி செய்ய நான்கு செயற்கைக் கோள்களைக் கொண்ட இந்திய மண்டல வழிகாட்டி செயற்கைகோள் அமைப்பை விண்வெளியில் நிலைநிறுத்தி செயல்படுத்தி வந்தது. தற்போது இந்தியாவின் உள்நாட்டு செயற்கைக்கோள் வழிசெலுத்துதல் அமைப்பில் இருந்த ஒரு செயற்கைக் கோளின் அணு கடிகாரம் செயலிழந்திருப்பதுதான் கவலையை ஏற்படுத்துகிறது.

இந்த செயற்கைக் கோள் அமைப்பின் மூலம், இயற்கைப் பேரிடர்கள், எல்லைப் பகுதிகளில் நடக்கும் ஊடுருவல், அண்டை நாடுகளில் பயங்கரவாத முகாம்கள் போன்றவற்றை இந்தியா கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுத்து வந்தன. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இந்த செயற்கைக் கோள் உதவியுடன் செயல்படும் ஜிபிஎஸ் நேவிக் கருவிகளும் வழங்கப்பட்டு, அவர்களுக்கு இயற்கைப் பேரிடர்கள் குறித்து தகவல்கள் அளிக்கப்பட்டு வந்தன. இந்த செயற்கைக் கோள் அமைப்பின் மூலம் சாதாரண மனிதர்கள் பெற்ற வாய்ப்புகளும் ஏராளம்.

இந்தியா நேவிகேஷன் அமைப்பில், நான்கு செயற்கைக் கோள்களில் ஒன்று முடங்கியதால் மற்ற மூன்று செயற்கைக் கோள்களும் இயங்கும் என்றாலும், குறைந்தது 4 செயற்கைக் கோள்கள், சரியான நிலைகளில் நிலைநிறுத்தப்படுவது அவசியம் என்பதால், ஒரு செயற்கைக் கோள் செயலிழந்திருப்பது கவலைக்குரிய விஷயமாகவே கருதப்படுகிறது. செயற்கைக் கோள் அனுப்பும் தகவல்கள், நேரம், உயரம், தொலைவு என பல விவரங்களையும் ஒன்றிணைத்து வழங்கப்படும். எனவே, ஓரிடத்தின் துல்லியத்தன்மையை அறிய மூன்று செயற்கைக் கோள்கள் அனுப்பும் விவரங்கள் சரிபார்க்கப்படும். தற்போது இரண்டு செயற்கைக் கோள்களின் தரவுகள் மட்டுமே கிடைக்கும் என்பதால் சவாலாக மாறியுள்ளது என்று கூறப்படுகிறது.

summary

About the atomic clock of the Navi satellite that malfunctioned in space..

முழு கட்டுரையைப் படிக்க →