இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை
இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம் இருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை
இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம் இருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்காசியாவில் நிலவி வரும் அச்சுறுத்தல் குறித்த அறிக்கையில் அமெரிக்க செனட் சபையில் அந்நாட்டு உளவுத் துறை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல், அச்சுறுத்தல் குறித்தும் 34 பக்க ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க உளவுத் துறை அறிக்கையின்படி, "கடந்த காலங்களில் இந்த இரு (இந்தியா - பாகிஸ்தான்) நாடுகளும் நேருக்குநேர் மோதிக் கொண்டதால், பதற்றம் அதிகரித்து, அணு ஆயுத மோதல் உருவாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலும், இரு நாடுகளுக்கிடையேயான பகைமையை எடுத்துக்காட்டும் உதாரணம்.
இந்தப் போரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீட்டால், இரு நாடுகளுக்கிடையேயான அணு ஆயுத மோதல் பதற்றம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் போரை முடிவுக்குக் கொண்டு வந்தன.
இருப்பினும், பயங்கரவாத அமைப்பினரால் புதிய நெருக்கடிகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
இரு நாடுகளும் வெளிப்படையான போரைத் தீவிரமாக முன்னெடுக்காத நிலையிலும், கடந்த காலத்தின் பகைமைகள், பயங்கரவாதம், வளர்ந்து வரும் ராணுவத் திறன்கள் ஆகியவை நெருக்கடிகளைத் தூண்டுவதாய் உள்ளன.
பாகிஸ்தான் தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதிக தொலைவு செல்லக்கூடிய மற்றும் அதிநவீன அமைப்புகளையும் பாகிஸ்தான் உருவாக்கி வருகிறது.
தெற்காசியாவுக்கு அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்கும் அளவுக்கு திறன்கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் போக்கு தொடர்ந்தால், அமெரிக்காவை தாக்கக்கூடிய அளவுக்கு கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அச்சுறுத்தலும் ஏற்படும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
India - Pakistan ties remain a risk for nuclear conflict: US Intelligence alert
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.