சேலம்

மேட்டூர் அருகே கிராமத்திற்குள் நுழைந்த காட்டுயானைகள்

DIN

மேட்டூர் வனச்சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் உள்ளது பொரசமரத்து காடு. இந்த கிராமம் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளது. 

வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் அடிக்கடி யானைகள் மான்கள் கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமத்திற்கு வந்து செல்லும். சில சமயங்களில் சிறுத்தைகளும் வந்து சென்றுள்ளன. இன்று அதிகாலை இந்த கிராமத்தில் ஐந்து யானைகள் வனப்பகுதியில் இருந்து குடிநீருக்காகவும் தீவனத்திற்கு ஆகும் நுழைந்தன. கால்நடைகள் மற்றும் நாய்களின் சப்தம் கேட்டு விழித்த கிராம மக்கள் தீ முட்டியும் பட்டாசு வெடித்தும் யானைகளை விரட்ட முயன்றனர்.

ஆனால் யானை கூட்டம் கிராம மக்களை விரட்டியது. குடியிருப்புகளுக்கு மிக அருகில் யானைக்கூட்டம் வந்ததால் கிராம மக்கள் விடிய விடிய கண்விழித்து யானைகளை விரட்டும் பணியில். இன்று காலை தகவலறிந்த மேட்டூர் வனத்துறையினர் கிராமத்திற்குச் சென்று யானைகளை பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

யானைகள் மாந்தோப்பு, தர்பூசணி தோட்டம், குச்சிக்கிழங்கு தோட்டம் மற்றும் இதர விவசாய தோட்டங்களில் நுழைந்து பெரும் சேதத்தை விளைவித்து வருகிறது. வனத்துறையினர் தாமதமாக வந்ததாலேயே யானைகளை விரட்ட முடியவில்லை என்று கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். யானைகள் கிராமத்திலேயே முகாமிட்டு அங்குமிங்கும் ஓடி சென்று வருகின்றன.

இதனால் கொளத்தூர் சுற்றுவட்டார கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT