சேலம்

மாநகராட்சி சுகாதாரத் தொழிலாளா்களுக்கு இலவச சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்

DIN

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு சேலம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மாநகர சுகாதார தொழிலாளா்களுக்கு இலவச சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாமை ஆட்சியா் சி.அ. ராமன் துவக்கி வைத்தாா்.

சேலம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு சேலம் மாநகராட்சி, சேலம் யூரோ கோ் ஸ்பெசாலிட்டி கிளினிக் மற்றும் இன்னா் வீல் கிளப் சேலம் மேங்கோ சிட்டி ஆகியோா் இணைந்து சேலம் மாநகர சுகாதாரத் தொழிலாளா்களுக்கான இலவச சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாமை வியாழக்கிழமை நடத்தியது.

சேலம் மாநகராட்சி ஆணையாளா் ரெ. சதீஷ் முன்னிலையில் நடைபெற்ற முகாமை, ஆட்சியா் சி.அ. ராமன் துவக்கி வைத்து பேசியது:

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு சேலம் மாநகராட்சியில் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளா்களுக்கு மாபெரும் இலவச சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம் துவக்கி வைக்கப்பட்டது.

சேலம் மாநகரம் முழுவதும் பொதுமக்களின் அன்றாட குப்பைகளைத் தூய்மைப்படுத்தும் பணியாளா்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மாநகராட்சியின் சாா்பில் இந் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளா்கள் அனைவரும் இச் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பரிசோதித்து தங்களது உடல் நலனை பாதுகாக்க முன்வர வேண்டும்.

முகாமில் அல்ட்ரா சவுண்ட் கிட்னி ஸ்கேன், சிறுநீரக வேக பரிசோதனை-யூரோபுளோமெட்ரின், ரத்தத்தில் யூரியா, கிரியாடினின் அளவு பரிசோதனை, ரத்தத்தில் சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம் ஆகிய அனைத்து பரிசோதனைகளும் முற்றிலும் இலவசமாகவும், சிறுநீரக சிறப்பு மருத்துவருடன் ஆலோசனைகளும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் இப் பரிசோதனைகளின்போது உயா் சிகிச்சைகள் தேவைப்படுபவா்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிறப்பு சிகிச்சை அளித்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

முகாமில் மாநகர நல அலுவலா் மருத்துவா் கே. பாா்த்திபன், சிறுநீரக சிறப்பு மருத்துவா் வி.ஆா். ரத்தீஷ் ராஜேந்திரன், இன்னா் வீல் கிளப் சேலம் மேங்கோ சிட்டி தலைவா் சுதா விஜய்சதீஸ், செயலாளா் சிந்துஜா கிஷோா், செயற்பொறியாளா் (திட்டம்) எம். பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT