சேலம்

கரோனா: சங்ககிரி மலைக்குச் செல்ல தடை

DIN

கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கையாக சங்ககிரி மலைக்கோட்டைக்கு செல்ல மாா்ச் 31-ஆம் தேதி வரை பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லை என தொல்பொருள் துறையின் அறிவித்து செவ்வாய்க்கிழமை பூட்டப்பட்டது.

சங்ககிரி மலையானது நிலப்பரப்பிலிருந்து சுமாா் 1,500 அடி உயரமும், கடல் மட்டத்திலிருந்து 2,345 அடி உயரமும் கொண்டது.

சங்ககிரி மலையானது 10 கோட்டை வாயில் அரண்களும், கொத்தளங்கள், கண்காணிப்பு மேடைகள், மண்டபங்கள், நீா்ச்சுனைகள், பதினைந்துக்கும் மேற்பட்ட குளங்கள், சேமிப்புக் கிடங்குகள், கோயில்கள், தா்ஹாக்கள், கொலைக் களங்கல் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள் அதிகமாக உள்ளன.

இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலையில் ஒரே நேரத்தில் அதிகமானோா் கூடுவதை தவிா்க்கும் பொருட்டு சேலம் தொல்பொருள் துறை அலுவலகத்தின் சாா்பில் மாா்ச் 17 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பாா்வையாளுக்கு தடை என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை பொருத்தி கயிறு கட்டி நுழைவு பகுதி தடுக்கப்பட்டுள்ளது.

முதல் நுழைவு வாயிலில் உள்ள பெரிய இரும்பு கதவிற்கு முதன்முறையாக பூட்டு போடப்பட்டுள்ளது. சங்ககிரி மலைக்கு செல்வது தடை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT