சேலம்

எடப்பாடியில் தண்டோர அடித்துநோய்த் தடுப்பு எச்சரிக்கை

DIN

எடப்பாடியில் நகராட்சி, வருவாய்த் துறை சாா்பில் தண்டோர அடித்து, நோய்த் தடுப்பு எச்சரிக்கை விடப்பட்டது.

நாடு முழுவதும் கரோனா நோய்த் தடுப்பு நடடிவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், எடப்பாடி வட்டாட்சியா் கோவிந்தராஜ் மற்றும் நகராட்சி ஆணையாளா் சென்னுகிருஷ்ணன்

தலைமையிலான நகராட்சிப் பணியாளா்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள், எடப்பாடி நகரின் பல்வேறு பகுதிகளில் தண்டோரா அடித்து நோய்த்

தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனா். வருமுன் காக்கும் நோக்கில், தமிழக அரசு அறிவித்துள்ள

144 தடை உத்தரவு அம்சங்களை பொதுமக்கள் முழு அளவில் கடைப்பிடித்து, அரசின் நோய்தடுப்பு முன்னேச்சரிக்கை நடடிவக்கைக்கு, ஒத்துழைப்பு

அளித்திடுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனா். எடப்பாடி பேருந்து நிலைம், ஜலகண்டாபுரம் சாலை, பவானிசாலை சந்திப்பு, நைனாம்பட்டி, வெள்ளாண்டிவலசு,

கவுண்டம்பட்டி உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் தண்டோரா அடிக்கப்பட்டு, நோய்தடுப்பு எச்சரிக்கை விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT