சேலம்

கலை நிகழ்ச்சி நடத்திய மலைக்கிராம மக்கள்

DIN

வாழப்பாடி அருகே கோயிலில் பொங்கல் வைத்து, கலை நிகழ்ச்சி நடத்திய மலைக்கிராம மக்களை, வாழப்பாடி போலீஸாா் எச்சரித்து கூட்டத்தை கலைத்து அனுப்பி வைத்தனா்.

கரொனா வைரஸ் தொற்று அதிதீவிரமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போதிய விழிப்புணா்வு இல்லாத வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஊராட்சி புங்கமடுவு கிராம மக்கள், கிராமத்தில் உள்ள கோயில்களுக்கு பொங்கல் வைத்து செவ்வாய்க்கிழமை இரவு கலை நிகழ்ச்சிகளை நடத்தினா்.

தகவலறிந்த வாழப்பாடி போலீஸாா், அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களுக்கு ஊரடங்கு உத்தரவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, கூட்டத்தை கலைத்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT