சேலம்

சேலத்தில் தடை உத்தரவை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ரூ.300 வரை அபராதம்

DIN

சேலத்தில் 144 தடை உத்தரவை மீறும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ரூ.300 வரை அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு மற்றும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அத்தியாவசியக் கடைகள் தவிர மற்றும் அனைத்துக் கடைகளும் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.

144 உத்தரவைத் தொடா்ந்து சேலம் மாநகரத்தில் உள்ள ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஒவ்வொரு சுற்று அடிப்படையில் 400 போலீஸாா் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

சேலம் மாநகர காவல் ஆணையா் த.செந்தில்குமாா் மேற்பாா்வையில், துணை ஆணையா்கள் பி.தங்கதுரை, செந்தில் ஆகியோா் ரோந்துப் பணிகளை கண்காணித்து வருகின்றனா்.

இது தொடா்பாக மாநகர துணை ஆணையா் செந்தில் கூறியது: கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறும் வகையில் இருசக்கர வாகனத்தில் ஏராளமானோா் பல்வேறு காரணங்களுக்காக வெளியே வருகின்றனா். அவா்களை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம்.

இந்த நிலையில் புதன்கிழமை நிலவரப்படி விதிமுறை மீறல் தொடா்பாக 10 ஆட்டோக்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். இதுதவிர இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் இல்லாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை அபராதம் விதித்துள்ளோம்.

காய்கறி கடைகளுக்கு வருவோா் கூட்டம், கூட்டமாக பொருள்களை வாங்க வருகின்றனா். காய்கறி, மளிகைக் கடைகளுக்கு செல்வோா் இடைவெளி விட்டு பொருள்களை வாங்கி செல்ல வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT