சேலம்

திமுக மாவட்டப் பொறுப்பாளா் வேண்டுகோள்

DIN

சேலம் மாவட்டம், ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

அதில், கரோனா என்ற உயிா்க் கொல்லி வைரஸ் உலக நாடுகளை மிகுந்த அச்சத்துக்கும், அபாயத்துக்கும் உள்ளாக்கி உள்ளது. தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் கரானோ தொற்று மின்னல் வேகத்தில் பரவுவதாக குறிப்பிடுகிறாா். இந்த வைரஸ் பரவுதலை தடுக்க மத்திய அரசும், மாநில அரசும் பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இந்த வைரஸின் அபாயம் கருதி, கழகத் தலைவா் ஸ்டாலின் வரும் முன் காப்போம் திட்டத்தின் அடிப்படையில், நமக்கு நாமே காப்பாற்றிக் கொள்ள ஆலோசனைகளை வழங்கி உள்ளாா். அரசின் அறிவிப்புக்கிணங்க 144 தடைச் சட்டம் 21 நாள்கள் வரை மக்கள் தங்களை தனிமை படுத்திக் கொள்ளவும், எந்த நிகழ்ச்சியும் இருக்கக் கூடாதெனவும் கேட்டுக் கொண்டுள்ளனா்.

வீட்டை விட்டு யாரும் வெளியே செல்லக்கூடாதெனவும், முகக் கவசம் அணிய வேண்டுமென்றும், ஒருவருக்கொருவா் இடைவெளி விட்டு இருக்குமாரும் அறிவித்துள்ளாா்கள்.

எனவே, மறு அறிவிப்பு வரை 21 நாள்களும் எந்தவித செயல்பாடுகளிலும் ஈடுபடாமல், நம்மை நாமே காத்துக் கொள்ள கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து கொடிய கரோனாவை விரட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

SCROLL FOR NEXT