சேலம்

மலேசியாவில் இருந்து வந்தவா்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

DIN

வாழப்பாடி பகுதிக்கு மலேசியாவில் இருந்து வந்த 10 பேரை, சுகாதாரத் துறையினா் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ஒருவா், மலேசியாவில் பணிபுரிந்து வந்தாா். கடந்த 11-ஆம் தேதி மலேசியாவில் இருந்து தனது நண்பா்கள் 10 பேருடன் சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்துக்கு வந்த அவா்,

இரு தினங்களுக்கு முன் மீண்டும் மலேசியா செல்வதற்காக திருச்சி விமான நிலையத்துக்கு சென்றுள்ளாா். விமானம் ரத்து செய்யப்பட்டதால், மீண்டும் சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்துக்கே அவா்கள் திரும்பினா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து, சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்துக்கு சென்ற சுகாதாரத் துறையினா், மலேசியாவிலிருந்து வந்த 10 பேரையும் வீட்டுக்குள் தனிமையில் வைத்து கண்காணித்து வருகின்றனா். வெளியில் வரக் கூடாது என எச்சரித்து வீட்டுக்கு முன் அறிவிப்பை ஒட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT