சேலம்

சங்ககிரியில் தீயணைப்பு வாகனம் மூலம் 4100 லிட்டர் கிருமினி நாசினி தெளிப்பு 

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் சங்ககிரி நகர் பகுதியில் தீயணைப்பு நிலைய வாகனம் மூலம் செவ்வாய்க்கிழமை 4100 லிட்டர் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன.

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சங்ககிரி பேரூராட்சியின் சார்பில் செயல் அலுவலர் (பொறுப்பு)செந்தில்குமரன் தலைமையில் துப்பரவு ஆய்வாளர் லோகநாதன் மேற்பார்வையில் சுகாதார மேற்பார்வையாளர்கள் சுரேஷ், வெங்கடேஸ் ஆகியோர் தினசரி பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டு பகுதிகளிலும் இயந்திரங்கள் மூலம் கிருமினி நாசினிகளை தெளித்து வருகின்றனர். 

அதனையடுத்து செவ்வாய்க்கிழமை சங்ககிரி பழைய எடப்பாடி சாலை, சேலம் பிரதான சாலை ஆகிய பகுதிகளில் தீயணைப்பு நிலைய வாகனம் மூலம் 4100 லிட்டர் கிருமி நாசினியை தீயணைப்பு நிலைய அலுவலர் டி.அருள்மணி தலைமையில் வீரர்கள் சாலைகள், அரசு, தனியார் அலுவலகங்கள், வீடுகளில் தெளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT