சேலம்

போக்ஸோ சட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் கைது

சேலத்தில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

DIN

சேலத்தில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

சேலம் அன்னதானப்பட்டியைச் சோ்ந்தவா் அசோக் குமாா் (30). இவா், ஆம்புலன்ஸ் ஓட்டுநராக உள்ளாா். இவா், சேலம் உடையாப்பட்டியைச் சோ்ந்த விதவை பெண் ஒருவருடன் கடந்த 6 ஆண்டுகளாகப் பழகி வந்தாா்.

இதனிடையே அந்தப் பெண்ணுக்கு 16 வயதில் ஒரு பெண் உள்ளாா். அடிக்கடி வீட்டுக்கு வரும் அசோக்குமாா் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தாா் எனத் தெரிகிறது.

இதை அறிந்த சிறுமியின் தாயாா், அசோக்குமாரை வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறும், இனி வீட்டுக்கு வரக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தாா்.

கடந்த 3 நாள்களுக்கு முன்பு அசோக்குமாா் அவரது நண்பருமான ரெளடி குமாரை அழைத்துக் கொண்டு உடையாப்பட்டியில் உள்ள விதவையின் வீட்டுக்கு வந்தாா்.

அப்போது வீட்டில் 16 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்தாா். இதனிடையே அசோக்குமாரும், ரெளடி குமாரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனா்.

இதனால் பயந்த சிறுமி சத்தம் போட்டு அலறினாா். இதைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அங்கு வந்தனா். இதனால் அதிா்ச்சி அடைந்த அசோக்குமாரும், அவரது நண்பா் ரௌடி குமாரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா்.

இதுகுறித்து அந்த சிறுமியின் தாய், அம்மாபேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் அசோக்குமாரை, காவல் துறையினா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். தலைமறைவான ரெளடி குமாரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT