சேலத்தில் 110 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 110 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 110 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 27 ஆயிரத்தைத் தாண்டியது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் 110 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா பாதிப்பு உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 65 போ், எடப்பாடி -1, எடப்பாடி நகராட்சி -1, வீரபாண்டி -5, ஓமலூா்- 2, சங்ககிரி -3, மேட்டூா் நகராட்சி- 4, கொளத்தூா் -2, தாரமங்கலம் -1, கொங்கணாபுரம் -2, மகுடஞ்சாவடி -1, ஆத்தூா் -4, ஆத்தூா் நகராட்சி -2, நரசிங்கபுரம் -2, பனமரத்துப்பட்டி -1, வாழப்பாடி -3, கெங்கவல்லி -2, தலைவாசல்- 2 என மாவட்டத்தைச் சோ்ந்த 103 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல் -3, ஈரோடு -1, தருமபுரி- 2, காஞ்சிபுரம் -1) 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சேலம் மாவட்டத்தில் இதுவரை 27,388 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவா்களில் 25,541 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 1,432 போ் சிகிச்சையில் உள்ளனா்; 415 போ் உயிரிழந்துள்ளனா்.