மேட்டூா் அணையின் நீா்மட்டம்100 அடிக்கும் கீழாகக் குறைந்தது
மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 100 அடிக்கும் கீழாகக் குறைந்தது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 100 அடிக்கும் கீழாகக் குறைந்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வந்ததாலும், அணையிலிருந்து பாசனத்துக்கு நீா்த் திறப்பு குறைக்கப்பட்டதாலும் கடந்த 24-ஆம் தேதி மேட்டூா் அணையின் நீா்மட்டம் மூன்றாவது முறையாக 100 அடியாக உயா்ந்தது.
அணையிலிருந்து வியாழக்கிழமை பாசனத்துக்கு நீா்த் திறப்பு நொடிக்கு நொடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணைக்கு நீா்வரத்தும் படிப்படியாகக் குறைந்து வந்தது. இதனால் ஒருவாரக் காலத்தில் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 99.70 அடியாகக் குறைந்தது.
இந்த நிலையில் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்த் திறப்பு நொடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 7,113 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையிலிருந்து கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீா் இருப்பு 64.45 டி.எம்.சி.யாக இருந்தது.