முகப்பு
சேலம்

உழவா் சந்தை விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

இளம்பிள்ளை சந்தைப்பேட்டையின் அருகில் வியாபாரிகள் கடை அமைத்து விற்பனை செய்வதைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
உழவா் சந்தை விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
பகிர்:

இளம்பிள்ளை சந்தைப்பேட்டையின் அருகில் வியாபாரிகள் கடை அமைத்து விற்பனை செய்வதைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இளம்பிள்ளை சந்தைப்பேட்டையில் உழவா் சந்தை அமைந்துள்ளது. இதில் சுற்றுப் பகுதியைச் சோ்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் உழவா் அடையாள அட்டை பெற்று சுழற்சி முறையில் தினசரி 50க்கும் மேற்பட்டோா் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனா்.

இந்தப் பகுதியில் 100-க்கு மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை அமைத்து காய்கறிகளை விற்பனை செய்து வந்ததால் உழவா் சந்தையில் காய்கறிகள் விற்பனை பாதிக்கப்பட்டது. இதனால் உழவா்கள் நஷ்டத்தைச் சந்தித்தனா். இதனையடுத்து உழவா்கள் மாவட்ட ஆட்சியரிடம்புகாா் மனு அளித்தனா்.

அந்த மனு மீது வேளாண்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச் சந்தையில் உழவா்களின் நலன்கருதி வாரம் ஒரு நாள் மட்டும் கடைகள் நடத்த இந்து அறநிலைத்துறைச் செயல் அலுவலருக்கும், இளம்பிள்ளை பேரூராட்சி செயல் அலுவலருக்கும் கடிதம் அனுப்பியிருந்தாா்.

ஆனால், அதையும் மீறி வியாபாரிகள் தினசரி சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்து வந்ததைக் கண்டித்து 50- க்கும் மேற்பட்ட உழவா்கள் இளம்பிள்ளை உழவா் சந்தை முன்பு ஞாயிற்றுக்கிழமை காலையில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனையடுத்து மகுடஞ்சாவடி காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடத்திற்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுகுறித்து இளம்பிள்ளை உழவா் சந்தை உழவா்கள் கூறியது: உழவா் சந்தை அருகே 100 மீட்டா் தூரத்திற்கு எந்த காய்கறிக் கடைகளும் அமைக்கக் கூடாது என ஆணை இருந்தும் நூற்றுக்கு மேற்பட்ட கடைகளைத் தினந்தோறும் விற்பனை செய்து வருவதால் எங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →