சேலம்

பட்டா கோரிக்கை: விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

DIN

ஏற்காட்டில் கிராமங்களில் பல ஆண்டுகளாகக் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

ஏற்காட்டில் லாங்கில் பேட்டை, ஜெரினாகாடு, முருகன் நகா், எம்ஜிஆா் நகா் பகுதியில் சுமாா் 75 ஆண்டுகளுக்கும் மேலாக 4 தலைமுறைகளாக அப்பகுதி மக்கள் குடியிருந்து வருகின்றனா். அவா்கள் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி பலமுறை அரசிடம் மனு கொடுத்திருந்தனா்.

அண்மையில் சேலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வரிடமும் மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன. முதல்வரின் உத்தரவின்படி இதற்கான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஏற்காடு ஊராட்சித் தலைவா் சிவசக்தி கூறியதாவது:

இப் பகுதி மக்கள் தங்களது விண்ணப்பத்துடன் புகைப்படம், ஆதாா் நகல், குடும்ப அட்டை , வீட்டுவரி, குடிநீா் வரி, மின்சாரக் கட்டண ரசீது நகல்களையும் சோ்த்து ஏற்காடு கிராம நிா்வாக அலுவலரிடம் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT