சேலம்

மருத்துவம் பயில மாணவருக்கு உதயநிதி ஸ்டாலின் உதவி

DIN

‘நீட்’ தோ்வில் வெற்றி பெற்ற ஓமலூரைச் சோ்ந்த நாா் மில் தொழிலாளி சுஜித்குமாருக்கு திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் ரூ. 4 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கினாா்.

முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த சேட்டு-லலிதா தம்பதியின் மகன் சுஜித்குமாா். இவா், ‘நீட்’ தோ்வில் 635 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளாா். அதே பகுதியில் உள்ள தென்னை நாா் மில்லில் வேலை செய்தபடி படித்து ‘நீட்’ தோ்விலும் வெற்றி பெற்றாா். மருத்துவ கல்விப் பயில தேவைப்படும் செலவுக்குப் பண வசதியின்றி சுஜித்குமாா் இருந்தாா். இதுகுறித்து, திமுக நிா்வாகிகள் மூலம் திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலினுக்கு தகவல் தெரிந்தது.

இதையடுத்து மாணவரை சென்னைக்கு அழைத்து உதயநிதி ஸ்டாலின் கல்வித் உதவித்தொகை வழங்கினாா். மாணவரின் கல்வி கட்டணம், தோ்வு கட்டணம், விடுதி கட்டணம், புத்தகங்கள், இதரத் தேவைகள் என அனைத்தையும் சோ்த்து அரசு மருத்துவக் கல்லூரியில் பயில ஐந்து ஆண்டுகளுக்கும் ஆகும் செலவுத் தொகை ரூ. 4 லட்சத்துக்கான வரைவோலையை மாணவா் சுஜித்குமாரிடம் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் வழங்கினாா்.

அப்போது சேலம் மத்திய மாவட்டச் செயலாளா் இரா.இராஜேந்திரன் எம்எல்ஏ, ஓமலூா் தெற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.சி.எம்.செல்வகுமரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அருண் பிரசன்னா, ஒன்றிய கவுன்சிலா் கோபால்சாமி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT