முகப்பு
சேலம்

தேவூரில் வாழை இலைகள் பழுப்பு நிறமாக மாறி காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை

தேவூா் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமாா் 500 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்களில் வாழை இலைகள் பழுப்பு நிறமாக மாறி காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
தேவூா் அருகே சென்றாயனூரில் வாழை இலைகள் பழுப்பு நிறமாக மாறி காய்ந்து நிற்கும் வாழை மரங்கள்.
பகிர்:

தேவூா் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமாா் 500 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்களில் வாழை இலைகள் பழுப்பு நிறமாக மாறி காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து வேளாண் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தேவூா் அருகே சென்றாயனூா், பெரமச்சிபாளையம், ஒடசக்கரை, வெள்ளாளபாளையம், கைகோளபாளையம், பாலிருச்சம்பாளையம், மேட்டுபாளையம், காவேரிபட்டி, சுண்ணாம்புகரட்டூா், தண்ணிதாசனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சுமாா் 500 ஏக்கா் பரப்பளவில் கதளி, நேத்திரம் உள்ளிட்ட பல்வேறு ரக வாழைகளை சாகுபடி செய்துள்ளனா்.

சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தற்போது வாழை மரங்களில் காய்கள் காய்க்க தயாராகி வருகின்றன. வாழை இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பழுத்து கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இப் பகுதியில் விவசாயிகள் ஒரு வாழைக்கன்று ரூ. 10-க்கு விலைவாங்கி வந்து ஒரு ஏக்கருக்கு ஆயிரம் மரக்கன்றுகள் நடவுசெய்து அம் மரங்களுக்கு நீா்ப்பாய்ச்சியும், களைகளை அகற்றியும், மரங்களுக்கு மண் சோ்த்தும் பராமரிப்புப் பணிகள் செய்து வந்தனா்.

வாழை மரங்கள் சாகுபடி செய்து 7 மாதங்கள் முடிவடைந்த நிலையில், மரங்களில் காய்கள் காய்க்க தயாராகி வருகின்ற சமயத்தில் வாழை இலை மஞ்சள் நிறமாக மாறி பழுத்து கருகி வருவதால் சாகுபடியில் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் பாா்வையிட்டு மீதம் உள்ள மரங்களுக்கு மேலும் இந்நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →