முகப்பு
கிரிக்கெட்

தில்லி கேபிடல்ஸுக்கு புதிய ஃபீல்டிங் பயிற்சியாளர் நியமனம்!

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு அயர்லாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜான் மூனி புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 19 மார்ச் 2026, 5:46 pm IST
ஜான் மூனி - படம் | தில்லி கேபிடல்ஸ் (எக்ஸ்)
பகிர்:

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு அயர்லாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜான் மூனி புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது.

இன்னும் ஒரு வாரத்தில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அணிகள் அனைத்தும் முகாம் அமைத்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அணி நிர்வாகங்கள் தங்களது அணிக்கான பயிற்சியாளர் மற்றும் இதர உதவிப் பயிற்சியாளர்களை நியமித்து வருகின்றன.

Advertisement

இந்த நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக அயர்லாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜான் மூனியை அந்த அணி நிர்வாகம் நியமித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இதன் மூலம், ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக செயல்படவுள்ள முதல் அயர்லாந்து வீரர் என்ற பெருமை ஜான் மூனியைச் சேரும். தில்லி கேபிடல்ஸின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி, பந்துவீச்சு பயிற்சியாளர் முனாஃப் படேல் மற்றும் உதவிப் பயிற்சியாளர் இயான் பெல் ஆகியோருடன் ஜான் மூனியும் இணைந்துள்ளார்.

அயர்லாந்து அணிக்காக ஜான் மூனி 64 ஒருநாள் மற்றும் 27 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Former Ireland all-rounder John Mooney has been appointed as the new fielding coach for Delhi Capitals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.