குஜராத் டைட்டன்ஸ் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் குறித்து...
தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மெதுவாக பந்துவீசிய காரணத்தினால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனுக்கு இந்த சீசனில் முதல்முறையாக அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் போட்டியின் 14-ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை புதன்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது. நடப்பு சீசனில் குஜராத்துக்கு இது முதல் வெற்றியாகும்.
Advertisement
Advertisement
டாஸ் வென்ற தில்லி பந்துவீச, குஜராத் அணி 20 ஓவர்களில் 210/4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தில்லி அணி 20 ஓவர்களில் 209/8 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இந்த சீசனில் முதலிரண்டு போட்டிகளில் ஷுப்மன் கில் கழுத்து வலி காரணமாக விளையாடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. குஜராத் அணி அடுத்த போட்டிகளில் லக்னௌ அணியை ஞாயிற்றுக்கிழமையும் தில்லி அணி சென்னையை சனிக்கிழமையும் எதிர்கொள்கின்றன.
Gill fined Rs 12 lakh for GT's slow over-rate against Delhi Capitals
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.