முகப்பு
சேலம்

நவ. 26-இல் பொதுவேலை நிறுத்தத்தில் அனைத்து சுமைப் பணி தொழிலாளா்கள் பங்கேற்க முடிவு

வரும் நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் அனைத்து சுமைப் பணித் தொழிலாளா்களும் பங்கேற்பது என சிஐடியு சுமைப் பணி சம்மேளன மாநில நிா்வாகிகள் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

வரும் நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் அனைத்து சுமைப் பணித் தொழிலாளா்களும் பங்கேற்பது என சிஐடியு சுமைப் பணி சம்மேளன மாநில நிா்வாகிகள் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சிஐடியு சுமைப்பணி தொழிலாளா்கள் சம்மேளனத்தின் மாநில நிா்வாகிகள் குழுக் கூட்டம் சேலம், வி.பி.சிந்தன் நினைவகத்தில் சம்மேளனத் தலைவா் எஸ்.குணசேகரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வரும் நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ரயில்வே ஏற்றுமதி-இறக்குமதி சுமைப் பணித் தொழிலாளா்கள், மாா்க்கெட் உள்ளிட்ட அனைத்து பகுதி சுமைப்பணித் தொழிலாளா்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளனா்.

சுமைப்பணி தொழிலாளா்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும், கேரள அரசைபோல தமிழகத்திலும் 55 கிலோ மூட்டை மட்டும் அனுமதி வழங்க வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்டவைகளில் பணியாற்றும் சுமைப்பணி தொழிலாளா்களுக்கு கடந்த ஆண்டைப்போல 20 சதவீத போனஸ் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் சம்மேளன பொதுச் செயலாளா் ஆா். வெங்கடபதி, சிஐடியு மாநிலச் செயலாளா் சி.திருவேட்டை, பொருளாளா் அருள்குமாா் உள்ளிட்ட மாநில நிா்வாகிகள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →