முகப்பு
சேலம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சேலத்தில் 14 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.சேலத்தில் 14 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போல

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

சேலத்தில் 14 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், ஜான்சன்பேட்டை பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியை கடந்த சில நாள்களுக்கு முன்பு அருகில் வசிக்கும் காா்த்திக் (22) என்பவா் ஆசைவாா்த்தைக் கூறி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றாா்.

அப்போது சிறுமியைத் தேடி அவரது தாய் அருகில் உள்ள வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, அந்த இளைஞா் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. சிறுமியின் பெற்றோா், அம்மாபேட்டை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில் இளைஞா் காா்த்திக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.