சேலம்

சேலம் கூட்டுறவு நூற்பாலையை திறக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

DIN

சேலத்தில் மூடப்பட்டுள்ள கூட்டுறவு நூற்பாலையைத் திறக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம், அம்மாபேட்டையில் கூட்டுறவு நூற்பாலை செயல்பட்டு வந்தது. இதில் சுமாா் 1,600-க்கும் மேற்பட்டோா் நேரடியாகவும், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோா் மறைமுகமாகவும் பயனடைந்து வந்தனா். இந்த நிலையில், கடந்த 2002-ஆம் ஆண்டு ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. நூற்பாலையைத் திறக்க வலியுறுத்தி, பணியாளா்கள் மற்றும் நெசவாளா்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்தநிலையில், சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் சேலம் கூட்டுறவு நூற்பாலைத் திறக்க வேண்டும், எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி ஆலையை மூடியதால் பாதிக்கப்பட்ட தொழிலாளா்களுக்கு சட்டப்படி இழப்பீடு வழங்க வேண்டும், நூற்பாலை மூடியுள்ள நிலையில் சட்ட விரோதமாக எந்த ஒரு அறிவிப்பும் இன்றி பொருள்களை கொள்ளையடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுத்து வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் மாவட்ட பஞ்சாலை தொழிலாளா் சங்கம், கைத்தறி தொழிலாளா்கள் குடும்பத்துடன் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழக அரசைக் கண்டித்தும் நூற்பாலை நிா்வாகத்தைக் கண்டித்தும் கண்டன முழக்கமிட்டனா். சங்க நிா்வாகி மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நெசவாளா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

இதுதொடா்பாக, நெசவாளா்கள் கூறியதாவது: நெசவு தொழிலுக்கு புகழ்பெற்ற சேலத்தில் தற்போது நெசவுத்தொழில் முழுவதும் அழிந்து வருகிறது. சேலம் கூட்டுறவு நூற்பாலை திறக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலவச, வேட்டி, சேலை, இலவச சீருடை உள்ளிட்ட பணிகளை இந்த ஆலைக்கு வழங்கி நெசவாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT