முகப்பு
சேலம்

வாழப்பாடி பகுதியில் பள்ளிகள் கருத்துக் கேட்புக் கூட்டம்

வாழப்பாடி பகுதியில், பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
வாழப்பாடி பகுதியில் நடந்த பள்ளிகள் கருத்துக் கேட்புக் கூட்டம்.
பகிர்:

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில், பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரும்பாலான பெற்றோர்கள், காரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த பிறகு பள்ளிகளை திறக்க வேண்டுமெ கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது.  இதனால், தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் செயல்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.

கரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு, 9 முதல் 12-ம் வகுப்பு வரை, பள்ளி வகுப்புகளை தொடங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் இடையே எதிர்ப்பும், ஆதரவும் காணப்படுகிறது.

இந்நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து, பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம், இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. வாழப்பாடி, சிங்கிபுரம், மேட்டுப்பட்டி, வெள்ளாளகுண்டம், பெரியகிருஷ்ணாபுரம், பேளூர், திருமனூர் அரசுப்பள்ளிகளில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான பெற்றோர்கள், கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த பிறகு பள்ளிகளை திறப்பு மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருக்குமென கருத்து தெரிவித்துள்ளனர். 

மேல்நிலை வகுப்பு மாணவர்களின் கல்வி, எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, கரோனா பரவல் தடுப்பு, பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து, பள்ளிகளைத் திறந்து சமூக இடைவெளியை கடைபிடித்து, பாட வகுப்புகளை தொடங்கலாம் எனவும், பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.