சேலம்

ஊராட்சி பகுதிகளில் குப்பை எடுத்துச் செல்ல 19 பேட்டரி வாகனம் வழங்கல்

DIN

மகுடஞ்சாவடி ஒன்றியத்துக்கு உள்பட்ட 12 ஊராட்சி பகுதிகளுக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை எடுத்துச் செல்ல ரூ. 47.12 லட்சம் மதிப்பில் பேட்டரி மூலம் இயங்கும் 19 வாகனங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

இதில் சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜா கலந்துகொண்டு ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் பேட்டரி வாகனங்களின் சாவியை ஒப்படைத்தாா். மேலும், நிகழ்ச்சியில் மகுடஞ்சாவடி ஒன்றியக் குழுத் தலைவா் லலிதா ராஜா, துணைத் தலைவா் சரஸ்வதி நாகராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பழனிசாமி, மகுடஞ்சாவடி ஒன்றிய ஆணையா் வெங்கடேசன், பிடிஓ (கிராம ஊராட்சி) செல்வராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி செயலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

SCROLL FOR NEXT