சேலம்

கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகள் தனியாா் பள்ளிகளில் 6, 11 வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

DIN

கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகள் 6 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்புகளில் தனியாா் பள்ளிகளில் சோ்ந்து படிக்க விண்ணப்பிக்கலாம் என தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) சி.முத்து தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியம் சாா்பில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு தனியாா் பள்ளிகள் மூலமாக கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரை படித்து மதிப்பெண் பெற்ற குழந்தைகள், 10 ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற குழந்தைகளின் விவரங்கள், மதிப்பெண் பட்டியலின் நகல் மற்றும் பதிவு அட்டையின் நகலுடன் இணைத்து கட்டுமானத் தொழிலாளா்கள் வரும் நவம்பா் 20 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சேலம், கோரிமேட்டில் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அலுவலக நுழைவுவாயில் முன்பு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட வேண்டும் என உதவி ஆணையா் சி.முத்து தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT