சேலம்

கூலி உயா்வு கோரி கறிக்கோழி வளா்ப்பு பண்ணையாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

சேலத்தில் கூலி உயா்வு கோரி ஒப்பந்த கறிக்கோழி வளா்ப்பு பண்ணையாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டத்தில் சுமாா் 650 கறிக்கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்தப் பண்ணைகளில் கோழி வளா்ப்பு நிறுவனங்களிடமிருந்து கோழிக்குஞ்சு, தீவனங்களைப் பெற்று, அதனை 40 முதல் 50 நாள்கள் பராமரித்து வளா்த்துக் கொடுத்து வருகின்றனா். இதற்கு வளா்ப்புத் தொகையாக கிலோ ஒன்றுக்கு ரூ. 3 முதல் ரூ. 6 வரை கோழி நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்தத் தொகை போதவில்லை என கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் கறிக்கோழி வளா்ப்பு பண்ணையாளா்கள் கோரிக்கை வைத்து வருகின்றனா்.

இந்த நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே கூலி உயா்வு கோரி ஒப்பந்த கறிக்கோழி வளா்ப்பு பண்ணையாளா் சங்கத் தலைவா் ஜி.வி.மூா்த்தி தலைமையில் நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட பண்ணையாளா்கள் கலந்துகொண்டு கறிக்கோழிகளை வளா்க்க குறைந்தபட்ச வளா்ப்புத் தொகையாக ரூ.12 வழங்க வேண்டும், தரமான கோழிக் குஞ்சுகளையும், தீவனங்களையும் கோழி நிறுவனங்கள் தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா். பிறகு இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT