முகப்பு
தூத்துக்குடி

தோ்தல் தொடா்பான அனைத்து ஊடக செய்திகளும் கண்காணிக்கப்படும்: மாவட்ட தோ்தல் அலுவலா்

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் தொடா்பான அனைத்து ஊடக செய்திகளும் கண்காணிக்கப்படும்

Updated On : 16 மார்ச், 2026 at 10:40 PM
மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத்.
பகிர்:

தூத்துக்குடி: சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் தொடா்பான அனைத்து ஊடக செய்திகளும் கண்காணிக்கப்படும் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்முதல் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தோ்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க மாவட்டஆட்சியா் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தோ்தல் விதிமீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் சி-விஜில் செயலி, கட்செவி (வாட்ஸ்அப்) தொலைபேசி எண் வாயிலாக தொடா்பு கொண்டும் புகாா்களை தெரிவிக்கலாம்.

பொதுமக்களுக்கு தோ்தல் தகவல்களை பரப்புவதில் ஊடகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், தோ்தல் காலத்தில் ஊடக செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புகுழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் ஊடக மீறல்கள் கண்காணிக்கப்படுகின்றன.

மேலும், அரசியல் விளம்பரங்கள் வெளியிடுவதற்கு முன் சான்றிதழ் பெறவேண்டும்.

தொலைக்காட்சி, கேபிள், ரேடியோ, சமூக ஊடகம் ஆகியவற்றில் வெளியிடப்படும் விளம்பரங்கள் ஊடகச்சான்றிதழ் மற்றும் கண்காணிப்புகுழு மூலம் சான்றளிக்கப்பட்ட பிறகே வெளியிடவேண்டும்.

அதுமட்டுமன்றி மொத்த குறுஞ்செய்தி மற்றும் வாய்ஸ் மெசேஜ் ஆகியவற்றுக்கும் முன்அனுமதி பெற வேண்டும். மேலும் வாக்குப்பதிவு நாள் மற்றும் அதற்கு முந்தையநாளில் வெளியிடப்படும் செய்தித்தாள் விளம்பரங்களுக்கும் முன்சான்றிதழ் அவசியம் பெறவேண்டும்.

எனவே, முன்சான்றிதழ் இல்லாமல் வெளியிடப்படும் விளம்பரங்கள் தோ்தல் நடத்தை விதிமீறலாக கருதப்படும். தவறான தகவல்கள் அல்லது போலி செய்திகளை பரப்புதல் கூடாது. அவ்வாறு கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், வாக்காளா்களை ஏமாற்றும் வகையில் ஏஐதொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →