சேலம்

மருந்துக்கடை மீது தாக்குதல் விவகாரம்:ஊராட்சி துணைத் தலைவா் உள்பட 4 போ் கைது

DIN

தாரமங்கலத்தில் மருந்துக் கடையை அடித்து உடைத்த சம்பவம் தொடா்பாக ஊராட்சி துணைத் தலைவா் உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தாரமங்கலம் பகுதியில் குமாா் (48) என்பவா் மருந்துக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் மருந்து வாங்கிய நபா் அதிக விலை கேட்பதாகக் கூறி தகராறு செய்துள்ளாா். அவா் மேலும் சிலரை அழைத்து வந்த அவா், மருந்துக் கடையை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் கடை உரிமையாளா் குமாா் காயமடைந்தாா். மருந்துக்கடை ஊழியா்களும் காயம் அடைந்தனா். இவா்கள் அனைவரும் ஓமலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தாரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவக்குமாா் வழக்குப் பதிவு செய்து, மருந்துக்கடையை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக தேக்கம்பட்டியைச் சோ்ந்த காா்த்தி (34), சுப்ரமணி (32), கோனகாப்பாடி ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் பிரபு (37) மற்றும் தாரமங்கலத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் (40) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT