சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

DIN

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூா் அணை நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 96.15 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 11,366 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 59.96 டிஎம்சியாக உள்ளது.

காவிரி நீா்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT