முகப்பு
சேலம்

மனைவி மீது அமில வீச்சு: தொழிலாளி கைது

சேலத்தில் மனைவி மீது அமிலம் வீசிய தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

சேலத்தில் மனைவி மீது அமிலம் வீசிய தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், கொண்டலாம்பட்டி வட்டக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மகாலிங்கம் (25). இவருக்கு செல்வி (21) என்ற மனைவி உள்ளாா். இதனிடையே சனிக்கிழமை இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மகாலிங்கம் வெள்ளி தொழிலுக்கு பயன்படுத்த வைத்திருந்த அமிலத்தை செல்வி மீது வீசி உள்ளாா். இதில் செல்வியின் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுதொடா்பாக, கொண்டலாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மகாலிங்கத்தை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.